சென்னையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினைச் சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், மேகேதாட்டு அணையால் தமிழகத்துக்குதான் அதிக பயன் கிடைக்கும் என்று கூறினார்.
சென்னையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினைச் சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், மேகேதாட்டு அணையால் தமிழகத்துக்குதான் அதிக பயன் கிடைக்கும் என்று கூறினார்.
சென்னை மாநகராட்சியில் செயல்படுத்தப்படும் திடக்கழிவுமேலாண்மை திட்ட நடவடிக்கைகளை பார்வையிட, கர்நாடக துணைமுதல்வர் டி.கே.சிவக்குமார் தலைமையிலான குழுவினர் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 3) சென்னை வந்தனர். சென்னை கிரீன்வேஸ் அப்போது, இளைஞர் நலன், விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை அவரது இல்லத்தில் கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் சந்தித்தார். முதல்வர் ஸ்டாலின், அமெரிக்கா சென்றுள்ளதால் அவரை சந்திக்க முடியாத நிலையில், இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமாக நடைபெற்றது.
அமைச்சர் உதயநிதியை சந்தித்தபின் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார், மேகேதாட்டு அணையால் தமிழகத்துக்குதான் அதிக பயன் கிடைக்கும் என்று கூறினார்.
கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “நண்பர் என்ற முறையில் அமைச்சர் உதயநிதியை சந்தித்தேன். கர்நாடகாவில், பெண்களுக்கு ரூ.2 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுவது குறித்து அங்கு உள்ள எதிர்க்கட்சிகள் பொறாமையில் உள்ளன. 2028-ம் ஆண்டிலும் காங்கிரஸ் அரசு அமைந்துவிடும் என்பதால் அவர்கள் கலக்கத்தில் உள்ளனர். தமிழகத்திலும் பெண்கள் மாதம் ரூ.1,000 பெறுகின்றனர்.
மேகேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக தற்போது விவாதிக்க விரும்பவில்லை. 2 மாநிலங்களிலும் மழை நன்றாக பொழிந்து உதவியிருக்கிறது. மேகேதாட்டுவில் அணை கட்டினால் அது கர்நாடகாவைவிட தமிழகத்துக்கே அதிகபயன் அளிக்கும் என்பதை இங்கு உள்ள அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்துக்கு நீர் திறப்பது தொடர்பாக நீதிமன்ற உத்தரவை மதித்து நடப்போம்.” என்று கூறினார்.
அரசு முறை பயணமாக சென்னை வந்த கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் சென்னை ரிப்பன் மாளிகையில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை கர்நாடகத்தில் செயல்படுத்துவது குறித்து மேயர் பிரியா மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகளுடன், ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்து, சென்னை வந்த கர்நாடக துணை முதல்வரும் கர்நாடக காங்கிரஸ் தலைவருமான டி.கே.சிவக்குமாரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை சந்தித்துப் பேசினார். அப்போது, பிராந்திய விஷயங்களை விவாதித்ததாக டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார்.