22 வருடங்களுக்கு பிறகு விஜய்க்கு ஜோடியான சினேகா.. கோட் படத்துக்காக வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

GOAT: மறுபடியும் மறுபடியும் சொல்றேன், என்ன தவிர வேற ஏதாவது பொண்ண பார்த்த தொலைச்சிடுவேன். இந்த வசனத்தை 90ஸ் கிட்ஸ்களால் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது. குஷி படத்தில் ஜோதிகா மற்றும் விஜய்க்கு இடையே சின்ன சின்ன ஈகோ சண்டைகள் பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்கும்.

அதன் பின்னர் வசீகரா படத்தில் விஜயை வம்பு இழுக்கும் சினேகாவின் கெமிஸ்ட்ரி பெரிய அளவில் கொண்டாடப்பட்டது. திருமணம் நிச்சயமான பெண் என்பதால் தன்னுடைய காதலை மறைத்துக் கொண்டு சினேகாவை வெறுப்பேற்றும் விஜய், காதலித்தவனை கரம் பிடிக்க துடிக்கும் சினேகா பார்ப்பதற்கு கொள்ளை அழகு.

இந்த ஜோடியை அப்படியே இருபத்தி ரெண்டு வருடங்கள் கழித்து கோட் படத்தில் கண்முன் காட்டி விட்டார் வெங்கட் பிரபு. இதற்கு முன்னர் ஒரு சில படங்களில் விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பு சினேகாவுக்கு அமைந்தது. அக்கா, அண்ணி போன்ற கேரக்டர்கள் என்பதால் சினேகா அந்த வாய்ப்பை திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.

சினேகா வாங்கிய சம்பளம்

அந்த காத்திருப்புகளுக்கு எல்லாம் கிடைத்த பரிசு தான் கோட் படம். சின்ன சின்ன கண்கள் பாடல் வீடியோவில் இவர்கள் இருவரையும் பார்ப்பதற்கு கொள்ளை அழகுடன் இருந்தது. சினேகா நடித்த இந்த கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தது ஜோதிகா தான்.

பேச்சுவார்த்தை நடைபெற்ற பின்னர் தோல்வியில் முடிந்ததா சினேகாவுக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது எல்லோருக்கும் தெரியும். இன்று கோட் படம் ரிலீஸ் ஆகி இருக்கும் நிலையில், இந்த படத்திற்காக சினேகா வாங்கிய சம்பள விவரம் வெளியாகி இருக்கிறது. சினேகா கோட் படத்திற்காக 75 லட்சம் ரூபாய் சம்பளமாக பெற்றிருக்கிறார்.

கோட் படம் வென்றதா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *