தமிழ் தெலுங்கில் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள நடிகை ஒருவரின் பிகினி க்ளிக்ஸ் வைரலாகி வருகிறது.
விக்ராந்த் நடிப்பில் வெளியான கற்க கசடற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ராய் லட்சுமி.
அதன்பிறகு பார்த்திபனுடன், குண்டக மண்டக, விஜயகாந்துடன் தர்மபுரி உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
தாம்தூம், முத்திரை, நான் அவனில்லை 2, இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார்.
கடைசியாக தமிழில் இவர் நடிப்பில் மிருகா படம் வெளியான நிலையில், லெஜண்ட் படத்தில் ஒரு பாடலுக்கு நடமாடியிருந்தார்.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ள ராய் லட்சுமி, தற்போது மலையாளத்தில் டி.என்.ஏ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ராய் லட்சுமி அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது பிகினி உடையில் ராய் லட்சுமி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.