அள்ளிக் கொடுப்பாருன்னு பார்த்தா கிள்ளி கொடுத்திருக்காரு.. விஜய் சேதுபதியின் பிக்பாஸ் 8 சம்பளம் இவ்வளவு தானா

Biggboss 8-Vijay Sethupathy: கமல் ஏழு வருடங்களாக தொகுத்து வழங்கி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி இப்போது விஜய் சேதுபதியின் கைக்கு மாறி இருக்கிறது. இந்த சீசன் 8 அவர் மூலம் இன்னும் சில வாரங்களில் கோலாகலமாக தொடங்கப்பட இருக்கிறது.

இதன் ப்ரோமோ வீடியோ சமீபத்தில் வெளியாகி அனைவரையும் கவர்ந்தது. இது எல்லாவற்றிற்கும் மேலாக விஜய் சேதுபதி எப்படி இந்த நிகழ்ச்சியை கொண்டு செல்வார் என்ற ஆர்வம் ரசிகர்களுக்கு அதிகமாக இருக்கிறது.

அதிலும் மக்களின் மனநிலையை புரிந்து நிகழ்ச்சியை கொண்டு செல்வாரா அல்லது ஆண்டவர் போல் பாராபட்சம் பார்ப்பாரா என்ற கேள்விகளும் முளைத்துள்ளது. அதனாலேயே விஜய் சேதுபதி தற்போது கவனமாக இந்த நிகழ்ச்சியை கொண்டு செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

விஜய் சேதுபதியின் ஆட்டம் எப்படி இருக்கும்.?

இது ஒரு புறம் இருக்க அவர் இந்த நிகழ்ச்சிக்காக வாங்கிய சம்பளம் என்ன என தெரியவந்துள்ளது. அதன்படி தற்போது அவருக்கு 50 கோடி சம்பளமாக கொடுக்கப்பட்டிருக்கிறது. இது அதிகம் தான் என்றாலும் கமலை ஒப்பிட்டு பார்க்கையில் அதில் பாதி கூட வரவில்லை.

ஏனென்றால் ஆண்டவருக்கு பிக் பாஸ் டீம் 120 கோடி கடந்த சீசனில் சம்பளமாக கொடுத்தது. ஆனால் விஜய் சேதுபதிக்கு குறைவாகத்தான் கொடுத்திருக்கிறார்கள். ஒரு வேலை அடுத்தடுத்த சீசனில் இது உயரவும் வாய்ப்பு இருக்கிறது.

இருந்தாலும் அள்ளிக் கொடுப்பாங்கன்னு பார்த்தா கிள்ளி கொடுத்திருக்காங்களே என்பதுதான் அனைவரின் மைண்ட் வாய்ஸ் ஆக இருக்கிறது. தற்போது நிகழ்ச்சியை தொடங்கும் பரபரப்பில் இருக்கும் விஜய் டிவி அடுத்த வாரத்தில் கிராண்ட் ஓப்பனிங் தேதியை அறிவிக்கும் என கூறப்படுகிறது.

விஜய் சேதுபதியின் பிக் பாஸ் சம்பளம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *