சொம்புக்கெல்லாம் என்னடா மரியாதை.. வரம்பு மீறிய மணிமேகலை, ஆரம்பமான குடுமிப்புடி சண்டை

Manimeghalai: மணிமேகலை மற்றும் பிரியங்கா இடையேயான பிரச்சனை கடந்த ஒரு வாரமாக சமூக வலைதளங்களில் பேசு பொருளாக இருக்கிறது. இந்த விஷயத்தில் பிரியங்காவை தவிர மற்ற எல்லோருமே வாயைத் திறந்து பேச ஆரம்பித்து விட்டார்கள்.

ஆரம்பத்தில் என்னவோ மணிமேகலைக்கு அதிக சப்போர்ட் இருப்பது போல் தெரிந்தது. சாமானிய மக்கள் எல்லாம் மணிமேகலைக்கு ஆதரவாகத் திரண்டு வர, பிரியங்காவுக்கு ஆதரவு கொடுத்தவர்கள் விஜய் டிவி ப்ராடக்டுகள்.

பாவனி ரெட்டி, சகிலா, அமீர், குரேஷி என ஒவ்வொருத்தராக பிரியங்காவுக்கு ஆதரவாக பேச ஆரம்பித்தார்கள். மணிமேகலை உண்மையிலேயே பிரியங்காவின் ஆதிக்கத்தால் ஒதுக்கப்பட்டு அதனால் வெகுண்டு எழுந்து உண்மையை வெளியில் சொல்லி இருந்தால் பாராட்டத்தக்கது.

மணிமேகலை முதன்முதலில் வீடியோ போட்ட போது கூட சிங்கப்பெண் என்ற ரேஞ்சுக்கு பேசப்பட்டார். இதை தொடர்ந்து குரேஷி தான் முதல் முறையாக பிரியங்காவுக்கு ஆதரவாக தன்னுடைய சேனலில் பேசி இருந்தார். இதை தொடர்ந்து சகிலா ரொம்பவும் ஆவேசமாக இந்த விஷயத்தை பற்றி பேட்டி கொடுத்திருந்தார்.

இந்த நிலையில் மணிமேகலை நேற்று தன்னுடைய யூடியூப் சேனல் பக்கத்தில் தன்னுடைய கணவர் ஹுசைன் உடன் இணைந்து சாதாரணமாக ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில் மணிமேகலை சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது உசேன் சொம்பில் தண்ணியை கொடுக்கிறார்.

ஆரம்பமான குடுமிப்புடி சண்டை

அப்போது மணிமேகலை அந்த சொம்பை தூக்கி எறிந்து விடுகிறார். ஏன் தூக்கி எறிஞ்சுட்டாய் என்று அவரோட கணவர் கேட்கும்போது சொம்புக்கு எல்லாம் என்ன மரியாதை என்று கேட்கிறார். அது மட்டும் இல்லாமல் தன்னிடம் whatsapp மெசேஜில் பேசும்போது தனக்கு ஏற்றது போலவும், வீடியோ போடும்போது பிரியங்காவுக்கு ஜால்ரா அடிப்பது போலவும் பேசுகிறார்கள்.

பணம்தான் இதையெல்லாம் செய்கிறது என பேசி இருக்கிறார். இது குரேஷியை தான் சொல்கிறார் என்று எல்லோரும் கமெண்ட் செய்து வந்த நிலையில், குரேஷி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதற்கு பதில் கொடுப்பது போல் ஸ்டோரி ஒன்றை போட்டு இருக்கிறார்.

அந்த பதிவில் குரேஷி, உங்க மூக்கு வரைக்கும் தலையிடுவது தான் என்னோட சுதந்திரம், அதை தாண்டி மூக்கின் மேல் கை வைக்கக் கூடாது, அதை நீங்களும் மெயின்டைன் பண்ணிக்கோங்க என்ற அஜித் வசனத்தை வீடியோவாக போட்டு, மெயின்டைன் பண்ணிக்கோங்க என கேப்டன் பதிவிட்டு இருக்கிறார்.

அடுத்தடுத்து இதற்கு யாரெல்லாம் பதில் சொல்லப் போகிறார்கள் என்று தெரியவில்லை. மாகாபா ஆனந்த் சொல்லியது போல் இரண்டு யானைகள் சண்டை போட்டால் வேடிக்கை தான் பார்க்க வேண்டும், குறுக்கே போகக் கூடாது. இது தெரியாமல் தற்போது குரேஷி சிக்கிக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *