நீண்ட நாள் காதலனை கரம் பிடித்தார் நடிகை #AmyJackson!

நடிகை எமி ஜாக்சன் தனது நீண்டநாள் காதலர் எட் வெஸ்ட்விக்கை நேற்று கரம்பிடித்தார். 

தமிழ் திரையுலகில் 2010ஆம் ஆண்டில் வெளியான ‘மதராசப்பட்டினம்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் எமி ஜாக்சன். அதன்பின் தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் ஆங்கில மொழிப்படங்களில் நடித்து பிரபலமானார். கடந்த 2015ஆம் ஆண்டு முதல் George Panayiotou என்பவருடன் டேட்டிங் செய்து வந்த எமி ஜாக்சன், அவர் மூலம் குழந்தைக்கு தாயானார். தொடர்ந்து இருவரும் திருமணமும் செய்து கொண்டனர். ஆனால் இந்த ஜோடி 2021ஆம் ஆண்டில் பிரிந்தது.

அதன் பின்னர் எமி ஜாக்சன், பிரித்தானியாவின் பிரபல நடிகர் எட் வெஸ்ட்விக்கை (எட்வர்டு ஜாக் பீட்டர் வெஸ்ட்விக்) காதலித்து வந்தார். இவர்கள் இருவருக்கும் கடந்த ஜனவரி மாதம் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், தற்போது திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.

திருமணம் தொடர்பான புகைப்படங்களை நடிகை எமி ஜாக்சன் தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில்  வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *