ஹீரோ அவதாரம் எடுத்த விஜய் டிவி பிரபலம்.. சிவகார்த்திகேயன், கவின் அளவுக்கு தாக்குப் பிடிப்பாரா.?

Vijay Tv: வாரிசு நடிகர்களின் வரவு ஒரு பக்கம் இருந்தாலும் விஜய் டிவியிலிருந்து ஹீரோ அவதாரம் எடுப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே இருக்கிறது. சந்தானம், சிவகார்த்திகேயன், கவின் வரிசையில் தற்போது புது ஹீரோ ஒருவர் களமிறங்கியுள்ளார்.

அதன்படி மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் KPY பாலா தான் தற்போது ஹீரோ அவதாரம் எடுத்துள்ளார். கவுண்டர் டயலாக்குகள் மூலம் பிரபலமான இவர் தற்போது மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.

மேலும் ராகவா லாரன்ஸ் தொடங்கி இருக்கும் அறக்கட்டளை மூலமும் இவர் தன்னால் முடிந்த உதவியை செய்து கொண்டிருக்கிறார். இதில் அவர் பிசியாக இருந்தாலும் கூட தற்போது அவர் சத்தம் இல்லாமல் மூன்று படங்களில் ஹீரோவாக நடிக்க கமிட்டாகி விட்டாராம்.

கதையின் நாயகனாக மாறிய பாலா

அதில் வைபவ் நடிப்பில் வெளியான ரணம் படத்தை ஷெரிப் இயக்கியிருந்தார். அவருடைய அடுத்த படத்தில்தான் பாலா ஹீரோவாக நடிக்க இருக்கிறார். இதற்கான வேலைகள் அனைத்தும் நடந்து வரும் நிலையில் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் தொடங்கப்பட இருக்கிறது.

இது தவிர இன்னும் இரண்டு படங்களிலும் இவர் ஹீரோவாக நடிக்க ஓகே சொல்லிவிட்டார். அதன் அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது. முன்னதாக பாலா சில படங்களில் காமெடி ரோலில் தலை காட்டி இருக்கிறார்.

அதனால் இவர் காமெடியனாக தான் வருவார் என ரசிகர்கள் நினைத்தனர். அதற்கு மாறாக அவர் ஹீரோவாகி இருப்பது பலரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது. இப்படித்தான் சிவகார்த்திகேயனை கூட காமெடியனாக வருவார் என எதிர்பார்த்தனர்.

ஆனால் அவர் இப்போது தளபதியின் இடத்தை பிடிக்கும் அளவுக்கு வந்து விட்டார். அதேபோல் பாலாவும் தன்னுடைய சமூக சேவை ஒரு பக்கம் நடிப்பு ஒரு பக்கம் என இரட்டைக் குதிரைகளில் பயணம் செய்ய தயாராகி விட்டார். மேலும் யோகி பாபு, சூரி வரிசையில் பாலாவும் வெற்றி நாயகனாக வரவேண்டும் என்பதே அவருடைய ரசிகர்களின் விருப்பம்.

விஜய் டிவியிலிருந்து களமிறங்கும் அடுத்த ஹீரோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *