தேவரா பட நிகழ்ச்சி, அரங்கத்தை அடித்து துவம்சம் செய்த விஸ்வாசிகள்.. என்.டி.ஆருக்கு வந்த பெரும் சோதனை! இதுதான் காரணம்

தெலுங்கு சினிமாவில் ஜூனியர் என்.டி.ஆரின் படங்களுக்கு ஏகபோக வரவேற்பு உள்ளது. அதிலும் ராஜமெளலி இயக்கத்தில், ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண் இணைந்து நடித்த ஆர்.ஆர்.ஆர் படம் உலகளவில் ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் குவித்து, ஆஸ்கருக்கும் சென்றது. பாடலுக்கான ஆஸ்கர் விருதும் பெற்று சாதனை படைத்தது.

இதையடுத்து, ஜூனியர் என்.டி.ஆருக்கு தமிழ் நாட்டிலும் பரவலாக ரசிகர்கள் உருவாகியுள்ளனர். ஒரு காலத்தில் தெலுங்கு சினிமா நடிகர்கள் படங்களுக்கு வரவேற்பு இல்லாமல் இருந்த நிலையில்,பாகுபலி 1 மற்றும் 2 கேஜிஎப் 1 மற்றும் 2, ஆர்.ஆர். ஆர், புஷ்பா ஆகிய படங்களுக்கு பின் இந்த மார்க்கெட் மாறிப்போய். தற்போது தமிழ் நடிகர்களுக்கு இணையான புகழை ரசிகர்களிடம் தெலுங்கு நடிகர்கள் பெற்றுள்ளனர்.

அதிலும், பாகுபலிக்குப் பின் பிரபாஸ் போன்று ஜூனியர் என்.டி.ஆரும் பான் இந்தியா நடிகராக மாறியுள்ளார். தற்போது, கொரட்டாலா சிவா இயக்கத்தில் தேவரா என்ற படத்தில் நடித்துள்ளார்.ஜான்சி கபூர் ஹீரோயினாக நடிக்க, அனிருத் இசையமைத்துள்ளார். ஜூனியர் என்.டி.ஆர் படங்களுக்கு பெரும் வரவேற்பு இருக்கும் நிலையில், தேவரா படம் வரும் செப்டம்பர் 27 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் உலகம் முழுவதும் ரிலீஸாக உள்ளது.

தற்போது, இப்படத்தை பிரபலத்தை வேண்டி, படக்குழு புரமோசன் பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் ஜூனியர் என்டி.ஆர். உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கட்னஹ்ட 10 ஆம் தேதி இப்படத்தின் டிரைலர் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், இப்படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சிக்கு பிளான் செய்திருந்த நிலையில், திடீரென்று இந்த நிகழ்ச்சி கேன்சல் செய்யப்பட்டது. இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன் அங்கு குழுமியிருந்த ரசிகர்கள் உள்ளே நுழைந்து அட்டகாசம் செய்தனர். இதில், அந்த அறையின் கதவு, ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன. எனவே ரசிகர்களின் அட்டூழியத்தை அடக்கமுடியாமல் நிகழ்ச்சியை படக்குழு தள்ளிவைத்தது. ஏற்கனவே படத்திற்கு ஓவர் ஹைப்பை ரசிகர்கள் கொண்டுவர முயற்சிக்கும் இக்காலத்தில், இப்படத்திற்கும் அதே நிலை உருவாகியுள்ளது.

மேலும், ஜூனியர் என்.டி.ஆர் ரசிகர்களை விலகிச் செல்ல வேண்டுமென்று வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது. விரைவில் இப்பட ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடக்க வேண்டும் என்பதுதான் ஆதங்கப்பட்டு அட்டூழியத்தில் ஈடுபட்ட ரசிகர்களின் வேண்டுகோளாக உள்ளது. அதேசமயம் இப்படத்தை முதல் நாளில் தியேட்டரில் கொண்டாடவும் ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *