ஜூனியர் என்.டி.ஆர் போஸ்டரை கொளுத்தியதால் பரபரப்பு.. தேவரா ஏற்படுத்திய மிகப் பெரிய ஏமாற்றம்

ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில், கொரட்டல சிவா இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள தேவரா படத்தைப் பார்த்த சில ரசிகர்கள் அதிருப்தியில் ஒரு தியேட்டருக்கு வெளியில் வைக்கப்பட்ட ஜூனியர்.என்.டி.ஆரின் போஸ்டரை கொளுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன் வரை ஒரு படம் ரிலீஸுக்கு முன்பு பத்திரிகைகளில் அப்படத்தின் செய்திகள் வெளியாகும், அதன் போஸ்டர்கள் வெளியாகும், டிவியில் அதன் டிரையிலர் டைம் என்று குறிப்பிட்ட நேரத்தில் ஒளிபரப்பாகும், பிராண்டுகளுடன் கைகோர்த்து அந்த விளம்பரத்திலும் அப்படங்களின் பெயர் இடம்பெறும்.

இதெல்லாம் இன்றைய காலத்தில் மலையேறிவிட்டது. ‘அடித்தால் மொட்டை வைச்சா குடுமி’ என்ற மாதிரி சமூக ஊடகங்களின் வருகை என்பது அறிவுசார் தேடல், தகவல்தொடர்பு திறனை வளர்த்துக் கொள்வதற்காக இருந்தாலும், இதையெல்லாம் மீறி, முன்னணி நடிகர்களுக்காக சண்டை போடுவது, தரம் தாழ்ந்து விமர்சிப்பது, தியேட்டர்கள் முன்பு அடித்துக் கொள்வது, தியேட்டரை அடித்து நொறுக்குவது? நடிகர்களின் போஸ்டரை கிழிப்பது, பேருந்தின் மீது ஏறி எங்க தலைவர் என்று ஆட்டம் ஆடுவது. இதெல்லாம் இன்று இணைதளம் வளர்ச்சி அடைந்துள்ள காலத்தில் நடந்து வருகிறது.

நடிகர்கள் படத்தில் நடிப்பதற்காக சம்பளம் வாங்குகிறார்கள், அப்பட புரமோசனுக்காக தயாரிப்பாளர் செலவு செய்கிறார்கள். இப்படத்தைப் பார்ப்பதால் ரசிகர்களுக்கு பொழுதுபோக்காக இருக்கும் என்று கருதி ஒரு படத்தை பார்த்தால் இங்கு பிரச்சனையே இருக்காது. ஆனால், ஓவர் ஹைப் ஏற்றி, ஒரு படத்தின் வெற்றி தோல்விக்கு ரசிகர்களின் ஆர்வக் கோளாறே காரணமாகிவிடுகிறது.

அந்த வகையில், கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர்- சயீஃப் அலிகான், ஜான்வி கபூர் உள்ளிட்டோர் நடிப்பில், அனிருத் இசையில் இன்று செப்டம்பர் 27 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாகியுள்ள படம் தேவரா. இப்படத்திற்கு இன்று காலை வரை கூட ரசிகர்கள் ஓவர் ஹைப் ஏற்றி, முதல் நாளில் ரூ.200 கோடி வரை வசூல் அள்ளும் என்று குறிப்பிட்டிருந்தனர்.

இப்படத்தில் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பு, அனிருத் இசை இதெல்லாம் நன்றாக இருந்தாலும், கதை பழைய கதை எனவும், இப்படத்தின் மீது ஓவர் எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்களை ஏமாற்றிவிட்டதாகவும் கூறி சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்துகள் பதிவிட்டு வருகின்றனர்.

இப்படம் இன்று வெளியான நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஒரு தியேட்டருக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த ஜூனியர் என்.டி.ஆரின் போஸ்டரை ரசிகர்கள் கொளுத்தியுள்ளனர். ஆர்.ஆர்.ஆர் என்ற சூப்பர் ஹிட் படத்தின் மூலம் பான் இந்தியா நடிகராக அறியப்பட்டுள்ள ஜூனியர் என்.டி.ஆருக்கு ‘தேவரா படத்தில் மாஸான ஒரு காட்சிகூட இல்லை என்று ரசிகர்கள் அவரது போஸ்டரை கொளுத்தி உள்ளதாக’ கூறப்படுகிறது. இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Devera - Junior NTR
Devera – Junior NTR

தேவரா இயக்குனர் கொரட்டல சிவா ஏற்கனவே மெகா ஸ்டார் சிரஞ்சீவி, ராம்சரணை வைத்து இயக்கிய ஆச்சார்யா பிளாப் ஆன நிலையில், இன்று கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளியான தேவரா படமும் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை என்று ரசிகர்கள் இப்படம் கலவையான விமர்சனங்கள் கூறி வருகின்றனர். அதேசமயம் சிலர் ரசிகர்கள் படம் மாஸாக இருப்பதாகவும் இப்படம் வசூல் சாதனை படைக்கும் என்று கூறி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *