Kalanithi Maran : விஜய் டிவியில் கடந்த ஐந்து சீசன்களாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தது. செஃப் தாமு மற்றும் செஃப் வெங்கடேஷ் பட் ஆகியோர் கடந்த நான்கு சீசங்களாக இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தனர். இந்நிகழ்ச்சியை நடத்தி வந்த மீடியா மிஷனுடன் விஜய் டிவிக்கு பிரச்சனை ஏற்பட்டது.
இதன் காரணமாக விஜய் டிவியில் இருந்து டாப் குக் டூப் குக் என்ற நிகழ்ச்சியை சன் டிவியில் நடத்தி வருகின்றனர். இதில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு பெற்ற பல மீடியா மிஷனுடன் வந்துவிட்டனர். அவ்வாறு வெங்கடேஷ் பட், ஜிபி முத்து, பரத் போன்ற பலரும் சன் டிவிக்கு வந்தனர்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியை காட்டிலும் டாப் குக் டூப் குக் நிகழ்ச்சிக்கு வரவேற்பு அதிகமாக கிடைத்தது. டிஆர்பியும் நன்றாக கிடைத்ததால் இதில் டைட்டில் வின்னருக்கு மிகப்பெரிய தொகையை கலாநிதிமாறன் வாரி வழங்கியிருக்கிறார். சமீபத்தில் பிரியங்கா மற்றும் மணிமேகலை இடையே ஆன பிரச்சனை பூதாகரமாக வெடித்தது.
குக் வித் கோமாளி மற்றும் டாப் குக் டூப் குக் பரிசுத்தொகை
பலரும் மணிமேகலைக்கு சப்போர்ட் செய்து வந்த நிலையில் பிரியங்கா டைட்டில் வின்னர் பட்டத்தை வென்றது அவர்களுக்கு அதிருப்தியை கொடுத்திருக்கிறது. இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் டைட்டில் வின்னரான பிரியங்காவுக்கு 5 லட்சம் பரிசாக கொடுக்கப்பட்டது.
மேலும் இரண்டாவது இடத்தை பிடித்த சுஜிதாவுக்கு ஒரு லட்சமும், சிறந்த கோமாளியாக தேர்ந்தெடுக்கப்பட்ட குரேஷிக்கு ஒரு லட்சம் ரூபாயும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டாப் குப் டூப் குக் நிகழ்ச்சியில் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் இரண்டு வெற்றியாளர்களை தேர்ந்தெடுத்திருந்தனர்.
சுஜாதா மற்றும் நாகேந்திர பிரசாந்த் ஆகியோர் டாப் குக் டூப் குக் டைட்டில் வின்னர் பட்டத்தை பெற்ற நிலையில் அவர்களுக்கு 20 லட்சம் பரிசு தொகை கொடுக்கப்பட்டிருக்கிறது. டிஆர்பியை அள்ளிக் கொடுத்த நிகழ்ச்சிக்கு கலாநிதி மாறனும் வாரி வழங்கி இருக்கிறார்.