தனுஷ், SK கொஞ்சம் ஓரமா போய் சண்டை போடுகிறீர்களா.? அலப்பறை இல்லாமல் சிம்பு தூக்கி விட்ட 8 பிரபலங்கள்

Simbu: ஊரு ரெண்டு பட்டால் கூத்தாடிகளுக்கு சந்தோசம் என்று ஒரு சொலவடை உண்டு. ஆனால் சினிமாவைப் பொறுத்தவரை போட்டி பொறாமை காரணமாக சில பிரபலங்கள் முட்டி மோதிக் கொண்டு வருகிறார்கள். இதனால் ரசிகர்கள் அவர்களுடைய ஹீரோக்கள் தான் பெருசு என்று சொல்லும் விதமாக மற்ற ஹீரோக்களை மட்டம் தட்டி பேசி சோசியல் மீடியாவில் அவர்களை கேலி கிண்டலும் செய்து கலாய்த்து வருகிறார்கள்.

அந்த வகையில் தற்போது தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் பஞ்சாயத்து நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே போகிறது. தான் சும்மா இருந்தாலும் தன் வாய் சும்மா இருக்காது என்று சொல்வதற்கு ஏற்ப இந்த ஒரு தருணத்திற்காக தான் காத்துக்கொண்டிருந்தேன் என்று சிவகார்த்திகேயன், மறைமுகமாக தனுசை தாக்கி விட்டார்.

சைலன்டாக ஸ்கோர் பண்ணும் சிம்பு

நான் கை கொடுத்து தூக்கி விட்டு வளர்ந்து நிற்கிறேன் என்று என்னை சொல்லி பழக்கப்படுத்தி விட்டார்கள். ஆனால் நான் அப்படி யாரையும் அறிமுகப்படுத்தவில்லை. என்னுடைய படத்தில் இவர் என்னுடைய நண்பராக காட்டிக் கொள்கிறேன் அவ்வளவுதான். அதனால நான் யாரையும் என்னால் தான் வளர்ந்து இருக்கிறார் என்று சொல்ல முடியாது. அது எனக்கு அவசியமும் இல்லை என்று தனுசை தாக்கி பேசி விட்டார்.

இதற்கு தனுசு ரசிகர்கள் சிவகார்த்திகேயனுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சோசியல் மீடியாவில் ட்ரோல் பண்ணி வருகிறார்கள். இப்படி இவர்கள் இருவரும் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அலப்பறை இல்லாமல் சிம்பு பற்றிய விஷயமும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது. அந்த வகையில் தனுஷ்சிவகார்த்திகேயன் கொஞ்சம் ஓரமாக போய் உங்க சண்டையை வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி சிம்பு சைலண்டாக ஸ்கோர் பண்ணி வருகிறார்.

அதாவது சிம்பு ரசிகர்கள் இதை பார்த்து சும்மா இருக்காமல், உங்க ஹீரோக்கள் பண்ணியதை விட என்னுடைய ஹீரோவை பாருங்கள் எத்தனை பிரபலங்களை தூக்கி விட்டு இருக்கிறார் என்று வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்பி விட்டார்கள். இந்த லிஸ்ட் படி சிம்பு உதவி செய்ததால் தான் நான் சினிமாவிற்குள் நுழைந்தேன் என்று சில பிரபலங்கள் சொன்ன வீடியோக்கள் வெளிவந்திருக்கிறது.

அந்த வகையில் காமெடி நடிகர் சந்தானம், பிரேம்ஜி, நெல்சன், விக்னேஷ் சிவன், சாண்டி, இவர்களை எல்லாம் வாய்ப்பு கொடுத்து தூக்கி விட்டது சிம்பு தான் என்று இவர்களே பல மேடைகளில் கூறியிருக்கிறார்கள். அத்துடன் என்னுடைய திறமைக்கு முதல் அங்கீகாரம் கொடுத்து ஊக்கம் அளித்தது சிம்பு தான் என்று பிரதீப், சசிகுமார் சிம்புவுக்கு பலமுறை நன்றிகளை கூறி இருக்கிறார்கள்.

இதோடு இன்னொரு சிறப்பு அம்சம் சிவகார்த்திகேயன் அவரும் கூறியது என்னவென்றால், ஆரம்ப காலத்தில் என்னுடைய படங்களுக்கு பெருசாக மக்களிடம் ரெஸ்பான்ஸ் இல்லாத பொழுது சினிமா சார்ந்தவர்கள் என்னை கூப்பிட்டு பாராட்டியதில் முதலாவது சிம்பு தான் என்று SK கூறியிருக்கிறார். இதுபோன்று இன்னும் சில பிரபலங்கள் தன்னை எப்போதும் ஊக்கப்படுத்தி உன்னால் முடியும் என்று பலமுறை உற்சாகப்படுத்தியது சிம்பு தான் என்று கூறி இருக்கிறார்கள்.

ஆனால் இவர்கள் அனைவரும் கூறிய ஒரு விஷயத்தை ஒருநாள் கூட சிம்பு யாரிடமும் வெளிப்படையாக சொன்னது கிடையாது. நான் தான் இவர்களை தூக்கி விட்டு அறிமுகப்படுத்தினேன். இவர்களுடைய வளர்ச்சிக்கு என்னுடைய பங்கும் இருக்கிறது என்று சிம்பு அலப்பறை பண்ணதே இல்லை. அத்துடன் சிம்புவின் தாரக மந்திரம் வளர்ந்தவர்களை விட வளர துடிப்பவர்களை பார்ப்பது ரொம்பவே பிடிக்கும்.

அதனால் என்னால் முடிந்த வரை அவர்களுக்கு ஒரு பாராட்டுகளை கொடுப்பேன் என்று பக்குவத்துடன் சிம்பு பேசி இருக்கிறார். ஆனால் இங்கே இப்படி இவர்கள் என்னதான் சண்டை போட்டாலும் திறமை இருந்தால் மட்டும்தான் தொடர்ந்து அவர்களுக்கான இடத்தை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்ற விஷயத்தை மறந்து விட்டார்கள். திறமை இல்லை என்றால் யார் தூக்கி விட்டாலும் அவர்கள் காணாமல் போய்விடுவார்கள் இதற்கு பலரும் உதாரணமாக இருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *