விஜய் சேதுபதியை சந்திக்கிறாரா மணிமேகலை.? கடைசி நேரத்தில் ட்விஸ்ட் வைத்த விஜய் டிவியின் பிளான் B

Manimegalai: பிரியங்கா பிரச்சனை இந்த அளவுக்கு பூதாகரமாக வெடிக்கும் என மணிமேகலையே எதிர்பார்த்து இருக்க மாட்டார். அதே போல் தனக்கு மக்கள் மத்தியில் இப்படி ஒரு செல்வாக்கா என அவர் இந்நேரம் மலைத்து போய் இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

அந்த அளவுக்கு சோசியல் மீடியாவில் அவர்தான் பேசுபொருளாக மாறி இருக்கிறார். அவருக்கு ஆதரவாக பிரியங்காவை சினிமா விமர்சகர்கள் முதல் நெட்டிசன்கள் வரை அனைவரும் வறுத்தெடுத்து வருகின்றனர்.

இதில் நாம் யாரும் எதிர்பார்க்காத ஒரு தகவல் தீயாக பரவி வருகிறது. அதாவது மணிமேகலை இப்படி ஒரு வீடியோவை வெளியிட்டதற்கு பின் பெரும் அரசியலே இருக்கின்றது என்கின்றனர். அவரை பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்புவது தான் விஜய் டிவியின் திட்டமாம்.

விஜய் டிவியின் பிளான் B

அதன்படி பரபரப்பை கிளப்புவதற்காக குறைந்த பட்சம் இரண்டு நாட்கள் ஆவது சோசியல் மீடியாவில் அவர் பெயர் அடிபட வேண்டும் என்பது ஒரு கண்டிஷன். அதனாலேயே மணிமேகலை பரப்பரப்பை கிளப்பி பிக் பாஸ் வீட்டுக்கு செல்ல தயாராகி விட்டார் என்கின்றனர்.

மேலும் விஜய் டிவி ஆரம்பத்தில் தேர்ந்தெடுத்த போட்டியாளர்களை விட்டுவிட்டு புது தேடலை ஆரம்பித்திருக்கிறதாம். ஆக மொத்தம் ஆட்டத்தை கலைத்து மணிமேகலையை உள்ளே இழுக்க பிளான் செய்து இருக்கிறது சேனல் தரப்பு.

ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என தெரியவில்லை. ஏனென்றால் சுயமரியாதை என்ற ஒரு வார்த்தையை தான் மணிமேகலை பயன்படுத்தியிருக்கிறார்.

அப்படி இருக்கும் நிலையில் இது டிராமா என தெரிந்தால் நிச்சயம் பல பின்னடைவுகளை அவர் சந்திக்க நேரிடும். அதனால் அவர் பிக் பாஸ் வீட்டுக்குள் செல்வாரா? விஜய் சேதுபதியை சந்திப்பாரா? ஆட்டம் சூடு பிடிக்குமா? என்பது இன்னும் சில வாரங்களில் தெரிந்து விடும்.

பிக் பாஸ் வீட்டுக்குள் போகிறாரா மணிமேகலை.?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *