Dhanush: தனுஷின் ராயன் படம் இப்போது திரையரங்குகளில் சக்கை போடு போட்டு வசூலை வாரி குவித்து வருகிறது. இந்நிலையில் சிவகார்த்திகேயனின் காதல் கிசுகிசுவை தனுஷ் வெளிப்படையாக சொல்லிய விஷயம் தான் இப்போது வைரலாகிக் கொண்டிருக்கிறது.
சிவகார்த்திகேயன் இப்போது அமரன் படத்தில் நடித்து வருகிறார். சூரி நடிப்பில் உருவாகி இருக்கும் கொட்டுகாளி படத்தை சிவகார்த்திகேயன் தான் தயாரித்துள்ளார். இந்த படத்தில் அறிமுக இயக்குனராக வினோத் ராஜ் உள்ளார்.
இந்நிலையில் இந்த இயக்குனரை சினிமாவில் சிவகார்த்திகேயன் அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். இந்த சூழலில் தனுஷ் தனது 3 திரைப்படத்தின் மூலம் தான் சிவகார்த்திகேயனை சினிமாவுக்கு கொண்டு வந்தார். அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கொடுத்தார்.
சிவகார்த்திகேயன் பற்றிய கிசுகிசுவை கூறிய தனுஷ்
இந்த சூழலில் சில கருத்து வேறுபாடு காரணமாக சிவகார்த்திகேயன் மற்றும் தனுஷ் இடையே பிரச்சனை வெடித்தது. இந்நிலையை முன்பு இருவரும் ஒன்றாக இருந்தபோது காபி வித் டிடி நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் காதல் கிசுகிசுவை தனுஷ் பேசி இருந்தார்.
அதாவது மரியான் படத்தில் ஒரு டயலாக் வரும் இதை கவனிச்சீங்களா என்று கேட்டிருப்பார். அதாவது அப்பா மற்றும் மகன் இருவரின் பெயரும் கொண்ட நடிகருக்கும் பூ பெயர் கொண்ட நடிகைக்கும் காதலா என்று வசனம் இடம் பெற்று இருக்கும்.
அதாவது சிவகுமார் மற்றும் கார்த்தி இருவரையும் சேர்த்து பெயர் கொண்டவர் சிவகார்த்திகேயன். அந்தப் பூ நடிகை யார் என்பத்தை தனுஷ் அந்த பேட்டியில் கூறவில்லை. அது யாராக இருக்கும் என ரசிகர்கள் சில நடிகைகளின் பெயரை கூறி வருகின்றனர். இதைத்தொடர்ந்து சிவகார்த்திகேயன் மேலும் சில கிசுகிசுகளிலும் சிக்கி இருந்தார்.