‘முல்லை பெரியாறு உடைந்தால் யார் பொறுப்பு?’: மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி

திருவனந்தபுரம்: “முல்லை பெரியாறு அணை உடைந்தால் ஏற்படும் சேதத்துக்கு யார் பொறுப்பேற்பர்?” என, மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி கேள்வி எழுப்பியுள்ளார்.

கேரளாவின் திருவனந்தபுரத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகரும், மத்திய பெட்ரோலியம், சுற்றுலாத்துறை இணை அமைச்சருமான சுரேஷ் கோபி பேசியதாவது:

முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து கவலை எழுப்பும் சமூக வலைதளப் பதிவு ஒன்றை சமீபத்தில் கண்டேன். அணை இடிந்து விழுமா, இல்லையா என்ற கேள்வி என் மனதில் இடிமுழக்கம் போல நிற்கிறது.

ஒருவேளை அணை உடைந்தால் யார் பொறுப்பு? அணையில் தண்ணீர் நிரப்புவதில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என உத்தரவிடும் நீதிமன்றம் பொறுப்பேற்குமா? அல்லது அந்த உத்தரவுகளை அமல்படுத்தும் அதிகாரிகள் பொறுப்பேற்பரா?

விளைவுகளுக்கு யார் பொறுப்பேற்பது என்ற கேள்விக்கு பதில் வேண்டும். மீண்டும் ஒரு மிகப்பெரிய பேரழிவை எதிர்கொள்ளும் சக்தி கேரளாவுக்கு இல்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *