சென்னை: தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை நடிகர் விஜய் துவக்கியுள்ளார். கட்சியின் கொள்கை அறிவிப்பு மாநாடு, செப்டம்பரில் நடக்க உள்ளது.
விஜய் மக்கள்இயக்கத்திற்கு, ஏற்கனவே வெள்ளைநிறத்தில், அவரது புகைப்படத்துடன் கூடிய கொடி பயன்படுத்தப்படுகிறது. மாநாட்டிற்கு தொண்டர்களை தயார் படுத்தும் வகையில் கட்சியின் கொடியை, நாளை மறுதினம் விஜய் அறிமுகம் செய்யஉள்ளார்.
இந்நிலையில், சென்னை பனையூரில் உள்ள தன் கட்சி தலைமை அலுவலகத்தில், பவுர்ணமி நாளான நேற்று, கட்சி கொடியை கம்பத்தில் ஏற்றி,விஜய் அழகுபார்த்துள்ளார்.
மஞ்சள் நிறத்திலான அந்த கொடியில்,விஜயின் புகைப்படம் இடம் பெற்றுள்ளது.