இந்த வயதில் அந்த விஷயம் தேவை படுகிறதா?. மோசமாக பேசினார்கள்!! பப்லு பிரித்திவிராஜ் ஓபன் டாக்..

பப்லு பிரித்திவிராஜ்

சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் பிரபல நடிகராக இருக்கும் பிரித்திவிராஜ் என்கிற பப்லு, கடந்த 1994 -ம் ஆண்டு பீனா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியருக்கு மகன் உள்ளார்.

விவகாரத்திற்கு பின்னர் பப்லு ஷீத்தல் என்ற இளம் பெண்ணுடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார். சில மாதங்களுக்கு முன்பு இந்த காதல் ஜோடி பிரிந்துவிட்டதாக தகவல் வெளியானது.

 

பேட்டி

சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய பப்லு பிரித்திவிராஜ், “ஷீத்தல் எனக்கு அறிமுகமான சமயத்தில் அவருக்கு 24 வயது, எனக்கு 55 வயது. நாங்கள் இருவரும் நண்பர்களாக பழகினோம், காதலித்தோம். எங்களுக்கு இடையே நல்ல புரிதல் இருந்ததால், என்னை மிகவும் சாதாரணமாக ஏற்றுக் கொண்டாள்”.

“ஆனால் இதற்கு நான் வாங்கிய ஏச்சு பேச்சுக்கள் கொஞ்ச நஞ்சமல்ல. 55 வயதான உனக்கு 24 வயது பெண்ணா என்று சொல்லி என்னை வறுத்தெடுத்தார்கள். இந்த வயதில் அந்த விஷயம் தேவை படுகிறதா என்று மோசமாக பேசினார்கள். . ஒரு கட்டத்தில் நமக்கு எல்லாம் தேவையா என்ற எண்ணம் எனக்கு வந்துவிட்டது”.

“இந்தக் கட்டத்தில் அனிமல் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தின் மாபெரும் வெற்றி பெற்றது. இதற்கிடையே விஜய் சேதுபதி ace படத்தில் நடித்திருந்தேன்.தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறேன்” என்று பப்லு பிரித்திவிராஜ் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *