பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பழனி மலை மீது அமர்ந்து பக்தர்களுக்கு முருகப்பெருமான் காட்சி தருகிறார். மலைக்கோவிலுக்கு செல்ல படிப்பாதை, யானைப்பாதை மற்றும் ரோப்கார், மின்இழுவை ரெயில் வசதிகளும் உள்ளன. பழனியில் தமிழக இந்து சமயஅறநியைத்துறை சார்பில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து பழனியில் அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. மாநாட்டையொட்டி அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டு உள்ளன. பழனி மலைக்கோவில் மின்னொளியில் ஜொலிக்கிறது. பழனி நகரமே விழாக்கோலம் பூண்டு உள்ளது.
அதன்படி, பழனியில் நடைபெறும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை ஆழ்வார்ப்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள தனது முகாம் அலுவலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து மாநாட்டு நிகழ்வுகள் தொடங்கி நடைபெற உள்ளன.