அமெரிக்காவின் ‘சிக் சாவர்’ நிறுவனத்திடம் இருந்து, 73,000 ‘சிக் – 716’ ஆட்டோமேட்டிக் தாக்குதல் துப்பாக்கிகளை வாங்க, ராணுவம் மீண்டும் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் வினியோகம், அடுத்த ஆண்டு இறுதியில் தொடங்கும் என கூறப்பட்டுள்ளது.
இந்நிறுவனத்துடன், 2019ம் ஆண்டில், 700 கோடி ரூபாய் மதிப்பில், 72,400 ‘சிக்’, 716 ரக துப்பாக்கிகளை வாங்க ராணுவம் ஒப்பந்தம் செய்திருந்தது.
இந்தியா — ரஷ்யா கூட்டணியில், 2018ம் ஆண்டில், ஆறு லட்சம் ‘ஏ.கே.,203’ துப்பாக்கிகளை உள்நாட்டில் தயாரிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால், தயாரிப்பில் பல தாமதங்கள் ஏற்பட்டதால், இதுவரை ஒரு லட்சம் துப்பாக்கிகள் மட்டுமே ராணுவத்துக்கு வழங்கப்பட்டுள்ளன.
மேலும் தாமதங்கள் ஏற்படாமல், ராணுவத்தை வேகமாக நவீனப்படுத்த, ‘சிக் சாவர்’ நிறுவனத்துடன் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.