மியூச்சுவல் பண்டு முதலீட்டில் சராசரி முதலீட்டாளர் களின் ஆர்வம் அதிகரித்து வருவது, நிதிகளில் முதலீடு செய்யும் சில்லரை முதலீட்டாளர்கள் எண்ணிக்கை அதிகரித்திருப்பதில் இருந்து தெரிய வந்துள்ளது.
மியூச்சுவல் பண்டு நிறுவனங் கள் சங்கம் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஜூலை மாதத்தில் மியூச்சுவல் பண்டு திட்டங்களில் செய்யப்படும் முதலீட்டில் 5 ரூபாயில் மூன்று ரூபாய் சில்லரை முதலீட்டாளர்களால் மேற்கொள்ளப்படுவதாக தெரிய வந்துள்ளது.
மேலும் கடந்த ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடும்போது மியூச்சுவல் பண்டு துறையால் நிர்வகிக்கப்படும் சொத்துக்கள் மதிப்பு, 40 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதில் சில்லரை முதலீட்டாளர்கள் 61 சதவீத பங்கு கொண்டுள்ளனர். தனிநபர் முதலீட்டாளர்களில் பெரும்பகுதி சமபங்கு நிதிகளில் முதலீடு செய்துள்ளனர். மொத்த அளவிலும், சமபங்கு நிதிகளின் முதலீடு கடந்த ஆண்டைவிட அதிகரித்துஉள்ளது குறிப்பிடத்தக்கது.
அதே நேரத்தில் நிதிக்கழக முதலீட்டாளர்கள் லிக்விட் பண்டு, பண சந்தை நிதிகள் உள்ளிட்டவற்றில் ஆர்வம் கொண்டுள்ளனர். மியூச்சுவல் பண்டு திட்டங்களில் முதலீடு செய்வதில் சில்லரை முதலீட்டாளர்கள் அதிக ஆர்வம் கொண்டிருப்பதை இந்த புள்ளி விபரங்கள் உணர்த்துவதாகக் கருதப்படுகிறது.