புதுடில்லி:’அதானி என்டர்பிரைசஸ்’ நிறுவனம், முதல்முறையாக, பொதுப் பத்திரங்கள் வெளியிட்டு, 800 கோடி ரூபாய் நிதி திரட்ட உள்ளது.
அதானி குழுமத்தைச் சேர்ந்த அதானி என்டர்பிரைசஸ், பொதுப் பத்திரங்களை அடுத்த மாதம் 4ம் தேதி தொடங்கி 17ம் தேதி வரை வெளியிடுவதாக பங்குச் சந்தையிடம் தகவல் அளித்துள்ளது.
இரண்டு, மூன்று மற்றும் ஐந்து ஆண்டுகளை தேர்வு செய்து முதலீடு செய்யப்படும் பத்திரங்களுக்கு முறையே 9.25, 9.65, 9.90 சதவீத வட்டி வழங்கப்படும் என்றும்; முதிர்வு காலத்தின்போது, மொத்தமாக இதே அளவிலான வட்டியைப் பெறும் வாய்ப்பும் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
‘டிரஸ்ட் இன்வெஸ்ட்மென்ட் அட்வைசர்ஸ், ஏ.கே.கேப்பிடல் சர்வீசஸ், நுவாமா வெல்த் மேனேஜ்மென்ட்’ ஆகியவை, அதானி நிறுவன பொதுப் பத்திர வெளியீட்டை நிர்வகிக்கவுள்ளன.