லால் சலாம் OTT ரிலீசுக்கு முன்பே சூனியம் வச்சிக்கிட்ட ஐஸ்.. ரஜினி பொண்ணுக்கு நாக்குல தான் சனி

Aishwarya Rajinikanth: சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தானாம் ஆண்டின்னு ஒரு பழமொழி சொல்வாங்க. அது சூப்பர் ஸ்டார் ரஜினியின் மூத்த பொண்ணுக்கு தான் சரியா இருக்கும் போல. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சீரியஸா பேசுற விஷயம் கூட சில நேரம் காமெடியா முடிஞ்சிடும்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 3 படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அறிமுக படம் ஆவரேஜ் ஹிட் கொடுக்க, இரண்டாவது படமான வை ராஜா வை வந்த சுவடு தெரியாமல் போனது. அதன் பின்னர் பல வருடங்களுக்கு பின் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய படம் தான் லால் சலாம்.

விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் இணைந்து நடித்திருந்த இந்த படம் கிரிக்கெட் விளையாட்டை மைய்யமாக கொண்டது. பிப்ரவரி மாதம் ரிலீஸ் ஆன இந்த படத்தில் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்திருந்தார்.

ரஜினி பொண்ணுக்கு நாக்குல தான் சனி

படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்பது நிதர்சனமான உண்மை. ஒரு படத்தின் வெற்றி, தோல்வி என்பது அந்த படக்குழு கடந்து போக வேண்டிய விஷயம் தான்.

ஆனால் தன்னுடைய படத்தின் விமர்சனங்களை தாங்க முடியாமல் ஐஸ்வர்யா தன் தரப்பு நியாயத்தை சொல்ல முயன்ற போது தான் ரசிகர்களுக்கு சலிப்பு ஏற்பட்டது.

லால் சலாம் படத்தின் சில குறிப்பிட்ட காட்சிகளின் புட்டேஜ் தொலைந்து விட்டதாகவும், அதனால் தான் அந்த காட்சிகள் இல்லாமல் படம் பார்க்கும் போது நிறைவாக இல்லை என சொல்லியிருந்தார். ஐஸ்வர்யா சொன்ன இந்த விஷயம் அவருக்கே எதிராக திரும்பியது.

தொலைந்த புட்டேஜுகளை மீட்டு பட காட்சியுடன் சேர்த்து கொடுத்தால் தான் வாங்குவோம் என நெட்ப்ளிக்ஸ் தரப்பு சொல்லியிருந்தது. இதனால் தான் படம் ரிலீஸ் ஆகி 8 மாதங்கள் ஆகியும் லால் சலாம் OTT பக்கம் தலை காட்டவில்லை.

தற்போது நெட்ப்ளிக்சில் இந்த படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இதுகுறித்து பேசிய ஐஸ்வர்யா, தொலைந்து போன புட்டேஜுகளை மீட்டெடுத்து இணைத்து விட்டதாகவும், தற்போது படம் நன்றாக இருக்கும் என்றும் சொல்லியிருக்கிறார்.

படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னமே இப்படி அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறார். படத்தை பார்த்து, அதில் சேர்த்து காட்சிகளை ரசிகர்கள் பாராட்டினால் தான் நன்றாக இருக்கும். அதை விட்டுவிட்டு பிள்ளை பெறுவதற்கு முன் பேர் வைப்பது போல் செய்துவிட்டார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *