குஜராத் தனியார் பள்ளி ஒன்றில் வகுப்பறை சுவர் இடிந்து விழுந்த சம்பவத்தில் மாணவர் ஒருவர் காயமடைந்துள்ளார். இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
குஜராத் மாநிலம் வதோதரா பகுதியில், வகோடியா சாலையில் உள்ள ஸ்ரீ நாராயண் குருகுலப் பள்ளி அமைந்துள்ளது. அப்பள்ளியின் முதல் தளத்தில் அமைந்திருந்த வகுப்பறையின் ஒரு பக்கச்சுவர் இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த 7ம் வகுப்பு படிக்கும் மாணவன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு முதல்கட்ட சிகிச்சைக்கு வழங்கப்பட்டுள்ளது. தற்போது அந்த மாணவனின் உடல்நிலை தேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் கிடைத்தவுடன் வதோதரா தீயணைப்புத் துறை குழுவினர் பள்ளிக்கு வந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தனியார் பள்ளியில் வகுப்பறை சுவர் இடிந்து விழுந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.