தியேட்டரில் விரட்டி விடப்பட்டு ஓடிடிக்கு வரும் சேனாபதி தாத்தா.. இந்தியன் 2 ரிலீஸ் எப்ப தெரியுமா.?

Indian 2 OTT: கடந்த மாதம் வெளிவந்த இந்தியன் 2 எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்களை இம்ப்ரஸ் செய்யவில்லை. இந்தியன் தாத்தா வராரு என ஆவலுடன் காத்திருந்த ஆடியன்ஸ் அவர் வந்த பிறகு இதுக்கு வராமலேயே இருந்திருக்கலாம் என்னும் அளவுக்கு நொந்து போனார்கள்.

இதற்கு முக்கிய காரணம் முதல் பாகத்தில் நாம் ரசித்த சேனாபதிக்கும் இரண்டாம் பாகத்தில் வந்த இந்தியன் தாத்தாவுக்கும் மலை அளவு வித்யாசம் இருந்தது. உதாரணத்திற்கு மேக்கப் கொஞ்சமும் பொருந்தவில்லை என்பது அனைவரின் கருத்து.

இதுபோல் இன்னும் பல விஷயங்களை நெட்டிசன்கள் கூறி வந்தனர். இது படத்திற்கு பெரும் பின்னடைவாக அமைந்த நிலையில் 250 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் 150 கோடியை மட்டுமே வசூலித்திருந்தது.

28 நாளில் டிஜிட்டலுக்கு வரும் இந்தியன் 2

இப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த பிரச்சனையையும் தீர்த்து விடலாம் என பிளான் போட்டிருந்த லைக்காவும் அதிர்ச்சியில் உறைந்தது. ஆனாலும் டிஜிட்டல் வருமானம் மூலம் ஈடுகட்டி விடலாம் என தயாரிப்பு தரப்பு எதிர்பார்த்தது.

ஆனால் இதன் உரிமையை வாங்கிய நெட்பிளிக்ஸ் பேசிய தொகையிலிருந்து பின்வாங்கினார்கள். அதன்படி 120 கோடிக்கு இந்தியன் 2 டிஜிட்டல் உரிமை பேசப்பட்டிருந்தது. ஆனால் படத்தின் ரிசல்ட் சொதப்பியதால் அதை நெட்பிளிக்ஸ் 70 கோடியாக குறைத்தனர்.

தொடர்ந்து இறுதி கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு தற்போது 90 கோடிக்கு டிஜிட்டல் உரிமை விற்கப்பட்டுள்ளதாம். அந்த வகையில் இந்தியன் 2 வெளியான 28 நாட்களிலேயே தற்போது ஓடிடியில் வெளிவர தயாராகி இருக்கிறது.

அதன்படி வரும் ஆகஸ்ட் 9ம் தேதி இப்படத்தை நெட்பிளிக்ஸ் தளத்தில் ஆடியன்ஸ் கண்டு மகிழலாம். தியேட்டரில் இருந்து விரட்டி விடப்பட்ட சேனாபதி டிஜிட்டலில் தாக்குப் பிடிப்பாரா என பார்க்கலாம். ஆகமொத்தம் கமல், ஷங்கர் சாதனை சரித்திரத்தில் இந்தியன் 2 பெரும் அடியாக இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *