வயநாட்டில் பிரதமர் மோடி: நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு

திருவனந்தபுரம்: வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இன்று (ஆகஸ்ட் 10) ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க உள்ளார்.
கடந்த ஜூன் 30ம் தேதி கேரளா வயநாட்டில், முண்டக்கை, சூரல்மலை ஏற்பட்ட கடும் நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 400ஐ கடந்தது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இன்று(ஆகஸ்ட் 10) கேரளா வந்த பிரதமர் மோடி, முதல்வர் பினராயி விஜயன், கவர்னர் ஆரிப் முகமது கான் உடன் கண்ணணூரில் இருந்து விமானப்படை ஹெலிகாப்டரில் சென்று நிலச்சரிவு பகுதிகளை பார்வையிட்டார்.

தொடர்ந்து, அவர் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவிக்க உள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசு அனைத்து உதவிகளும் செய்யும் என மோடி உறுதி அளித்தார். உடனடியாக வழங்கப்பட வேண்டிய உதவிகள் குறித்து கேரளா அரசு சார்பில் பிரதமர் மோடியிடம் மனு அளிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *