ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் மர்ம முடிச்சை அவிழ்த்த அருண் IPS.. யார் அந்த ‘சம்போ’ செந்தில்

Armstrong murder case: பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் மரணம் தமிழ்நாட்டையே புரட்டி போட்டு இருக்கிறது. அடுத்தடுத்து ரவுடிகள் என்கவுண்டர் செய்யப்படுவதும், லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்படுவதும் ஆக தமிழ்நாடு காவல்துறை படு பிசியாக இருக்கிறது.

ஆம்ஸ்ட்ராங் கொலை எதனால் நடந்திருக்கும் என சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் ஐபிஎஸ் விசாரணையை பல கோணங்களில் நடத்தி வருகிறார். கடந்த சில வருடங்களுக்கு முன் இறந்த ஆற்காடு சுரேஷ், 1997 ஆம் ஆண்டு இறந்த தோட்டம் சேகர் என அடுத்தடுத்த பழிவாங்கும் படலங்கள் வெளியில் தெரிய வந்திருக்கிறது.

இதில் தற்போது முக்கிய குற்றவாளியாக சந்தேகிக்கப்படுபவர் தான் சம்போ செந்தில். இவர் மீது ஏற்கனவே நிறைய கொலை வழக்குகள் இருக்கின்றன. வடசென்னையில் ஸ்க்ரப் பிசினஸில் பெரிய ஆளாக இருக்கிறார்.

கடந்த சில வருடங்களுக்கு முன்னால் இவருக்கு ஒரு கொலை வழக்கில் லுக் அவுட் நோட்டிஸ் அனுப்பப்பட்டு இருக்கிறது. அதன் பிறகு இவரும், இவருடைய மனைவியும் போலி பாஸ்போர்ட்டில் வெளிநாட்டுக்கு சென்று விட்டார்கள்.

வெளிநாட்டிலிருந்து கொண்டே இந்த ஸ்க்ரப் தொழிலில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். இந்த தொழிலில் ஏற்பட்ட பிரச்சனையில் ஆம்ஸ்ட்ராங் கட்டப்பஞ்சாயத்து செய்ததாக சொல்லப்படுகிறது.

சம்போ செந்தில் இந்த தொழிலை நடத்துவதற்கு ஆர்ம்ஸ்ட்ராங் தடையாக இருந்ததால் இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் சென்டிலை தேடுவதற்காக ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *