திமுக-அதிமுக பங்காளிங்க, எனக்கு மச்சான் விஜய் தான்.. தளபதிக்கு ஸ்கெட்ச் போடும் பெரும் தலை

Vijay: தளபதி விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி இருக்கிறார். நாடாளுமன்ற தேர்தலிலேயே அவர் போட்டியிடுவார் என்று எதிர்பார்த்த நிலையில் சட்டமன்ற தேர்தல் தான் அவரது தொடக்கமாக இருக்கிறது. இதில் அவருடன் கூட்டணி போட பெருந்தலை ஒன்று ஸ்கெட்ச் போட்டு உள்ளது.

அரசியல் களத்தில் இப்போது பெரிதும் பேசப்படும் தலைவர்களுள் ஒருவர்தான் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. இவர் நேற்று கலைஞரின் நினைவிடத்திற்கு சென்று தனது மரியாதையை செலுத்தினார். அப்போது 2026 சட்டமன்ற தேர்தல் பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இந்நிலையில் இப்போது அரசியல் கட்சிகள் மற்றும் மக்கள் அனைவருமே 2026 தேர்தலை பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதில் பாஜகவின் கூட்டணி குறித்து அண்ணாமலை இடம் கேள்வி எழுப்பியதற்கு அவர் ஒரு வேடிக்கையான பதிலை கூறியிருக்கிறார்.

விஜய்யுடன் கூட்டணி அமைக்க ஆசைப்படும் கட்சி

அதாவது தமிழகத்தில் பாஜக ஆட்சி செய்ய வேண்டும் என்பதை மக்கள் விரும்புகிறார்கள். மேலும் திமுக மற்றும் அதிமுக ஆகியோர் பங்காளிகள், ஆகையால் இனி அவர்களுடன் கூட்டணி அமைக்க போவதில்லை என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

ஆனாலும் 2026 தேர்தலில் கூட்டாட்சி தான் என்பது ஏற்கனவே நான் சொல்லி இருக்கிறேன். ஆகையால் பங்காளி எங்களுக்கு வேண்டாம் என்றும் இனி எல்லாமே மாமன் மச்சான் கூட்டணி தான் என்று அண்ணாமலை கூறி இருக்கிறார்.

அப்போது விஜய் கூட்டணிக்கு வந்தால் ஏற்பீர்களா என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அவரும் மாமன் மச்சான் கூட்டணி தான் என்று சூசகமாக அண்ணாமலை பதிலளித்து உள்ளார். இப்போது தமிழகத்தில் தளபதி விஜய்க்கு பெரும் ஆதரவு இருந்து வருகிறது.

நாம் கட்சி தலைவர் சீமான் கூட விஜய்யுடன் கூட்டணி அமைப்பேன் என்று கூறியிருந்தார். இந்த சூழலில் பாஜகவும் விஜய்யுடன் கூட்டணி வைத்தால் வெற்றி பெறலாம் என்ற நினைப்பில் இப்போது செயல்பட்டு வருவது அண்ணாமலை பேசியதில் இருந்து தெரிகிறது.

அரசியலில் தடம் பதிக்க போகும் விஜய்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *