சிங்கமுத்துக்கு வடிவேலு வச்சாரு பாரு ஆப்பு.. மானம் மரியாதையை இழந்ததால் கொந்தளித்த மாமன்னன்

Vadivelu and Singamuthu: ராஜ்கிரனால் அறிமுகப்படுத்தப்பட்ட வடிவேலு, அவருடைய திறமையை வளர்த்துக் கொண்டு ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான நகைச்சுவையை கொடுத்து சினிமாவில் அவர்கென்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார். அந்த வகையில் கிட்டத்தட்ட 300 படங்களுக்கும் மேல் நடித்து, மீம்ஸ் கிரியேட்டருக்கு இவர் தான் கிங் ஆப் த மேன் என்று சொல்லும் அளவிற்கு ராஜாவாக ஜொலித்து வருகிறார்.

அந்த அளவிற்கு தன்னுடைய முகபாவனை வைத்துக்கொண்டு உடல் தோற்றத்தை மாற்றி சிரிப்புக்கு பஞ்சமே இல்லாத வகையில் பார்ப்பவர்கள் வயிறு குலுங்க சிரிக்கும் வகையில் நகைச்சுவை மன்னனாக திகழ்ந்து வருகிறார். இப்படி இவருடைய திறமையை பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்.

முதல்முறையாக ரோசப்பட்டு பொங்கி எழுந்த வடிவேலு

ஆனாலும் இவரிடம் இருக்கும் தனிப்பட்ட குணங்கள் பலருக்கும் வேதனையையும் ஏமாற்றத்தையும் கொடுக்கிறது என்று சமீப காலமாக யூடியூப் சேனல் மூலம் ஒவ்வொரு ஆர்டிஸ்ட்களும் புலம்பி இருக்கிறார்கள். இன்னும் சொல்ல போனால் இவருடன் சேர்ந்து நடித்த சக ஆர்டிஸ்ட்கள் பண வசதி இல்லாமல் இக்கட்டான சூழலில் இருக்கும் பொழுது கூட கொஞ்சம் கூட அவர்களை எட்டி பார்க்காத ஒரு மனசாட்சி இல்லாத நடிகராக தான் அனைவருக்கும் கண்ணுக்கும் தென்பட்டார்.

அந்த வகையில் போண்டாமணி, பாவா லட்சுமணன், அல்வா வாசு போன்றவர்கள் மருத்துவமனையில் இருந்த பொழுது ஒரு பைசா கூட கொடுத்து உதவவில்லை என்பது பலருக்கும் வேதனையை கொடுத்தது. இந்த நிலையில் நகைச்சுவை நடிகர் சிங்கமுத்து, சமீபத்தில் அளித்த ஒரு யூடியூப் சேனலில் வடிவேலுவை பற்றி அவதூறாக பேசி தன்மானத்துக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக பல விஷயங்களை போட்டு உடைத்திருக்கிறார்.

இதை பார்த்து பொறுக்க முடியாத வடிவேலு, தன்னுடைய மானத்தையும் மரியாதையும் கெடுத்த சிங்கமுத்துக்கு சரியான பாடத்தை கற்பிக்க வேண்டும் என்று அவருக்கு மிகப்பெரிய ஆப்பை வைத்து விட்டார். அந்த வகையில் வடிவேலு, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார். அதில் அவர் கூறியது என்னுடன் நடித்த சக நடிகரான சிங்கமுத்தும் நானும் கடந்த 2000 ஆண்டு முதலை ஒன்றாக நடித்து வந்தோம். ஆனால் 2015 ஆம் ஆண்டுக்குப் பிறகு என்னைப் பற்றி மோசமாக விமர்சித்து வந்ததால் அவருடன் சேர்ந்து நடிப்பதை தவிர்த்து விட்டேன்.

ஆனாலும் கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் சிங்கமுத்து youtube சேனலில் அளித்த பேட்டியில் என்னை தர குறைவாக பேசி இருக்கிறார். அவர் அப்படி பேசியிருப்பதால் பொதுமக்கள் மற்றும் என்னுடைய ரசிகர்கள் மத்தியில் எனக்கு இருக்கும் நற்பெயரை களங்கப்படுத்துவது போல் இருக்கிறது. எனவே சிங்கமுத்து எனக்கு நஷ்ட ஈடாக 5 கோடி கொடுக்க வேண்டும் என்று உத்தரவு விட வேண்டும் என கேட்டு இருக்கிறார்.

அத்துடன் இனி என்னைப் பற்றி அவதூறான பேச்சுக்களை பேசுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று வடிவேலு கொடுத்த மனுவில் கோரிக்கையாக வைத்திருக்கிறார். இது சம்பந்தமான மனுவிற்கு, சிங்கமுத்து இரண்டு வாரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் சிங்கமுத்து மட்டுமில்லாமல் வடிவேலு உடன் இணைந்து நடித்த சக நடிகர்கள் அனைவருமே சமூக வலைதளங்களில் அவரைப் பற்றி மோசமாகத்தான் சொல்லி இருக்கிறார்கள். அப்படி என்றால் அவர்கள் அனைவரும் மீதும் மான நஷ்ட ஈடு போடப் போறாரா என்ன. இது ஏதோ சிங்கமுத்துக்கு விரித்த வலை போல் இல்லை, மற்ற சக நடிகர்களுக்கும் ஒரு பயத்தை ஏற்படுத்தும் விதமாக வடிவேலு கொந்தளித்ததாக தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *