Raayan: சன் பிக்சர் தயாரிப்பில் தனுஷ் இயக்கி நடித்த ராயன் மாபெரும் வெற்றி பெற்றது. கடந்த ஜூலை 26ல் வெளியான இப்படம் தற்போது வரை 158 கோடிகளை வசூலித்துள்ளது. இந்த வருடம் வெளியான படங்களிலேயே இப்படம் தான் அதிக வசூல் பெற்றுள்ளது.
எஸ் ஜே சூர்யா, சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்த இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார். அந்த வகையில் படத்தில் இடம்பெற்று இருந்த அடங்காத அசுரன், வாட்டர் பாக்கெட் பாடல்கள் இப்போது சோஷியல் மீடியா ட்ரெண்டிங் ஆக இருக்கிறது.
அதிலும் உசிரே நீதானே பாடலை குழந்தைகள் முதல் அனைவரும் கொண்டாடி வருகின்றனர். இப்படி ரசிகர்களை கவர்ந்த இப்படத்தால் தயாரிப்பு தரப்பும் கைநிறைய லாபம் பார்த்துள்ளனர். அதனால் கலாநிதி மாறன் இப்போ ஹேப்பி அண்ணாச்சி.
தனுசுக்கு கொடுத்த செக்
அதை கொண்டாடும் வகையில் தற்போது அவர் தனுசுக்கு இரண்டு செக் கொடுத்து ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். அதாவது ஒன்று இயக்குனர் தனுசுக்கு மற்றொன்று ஹீரோ தனுசுக்கு. ஒரு செக் ஒரு கோடி வீதம் மொத்தம் இரண்டு கோடி அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.
ஏற்கனவே இப்படத்திற்காக தனுசுக்கு பல கோடி சம்பளம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதை தாண்டி தற்போது லாபத்திலும் ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுத்து அசத்தி இருக்கிறார் கலாநிதி மாறன். ஆனால் படத்தின் மற்றொரு ஹீரோவான ஏ ஆர் ரகுமானுக்கு எதுவும் இல்லையா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
முன்னதாக ஜெயிலர் மாபெரும் வெற்றி பெற்ற போது சன் பிக்சர்ஸ் ரஜினி, நெல்சன், அனிருத் ஆகியோருக்கு காசோலை கொடுத்தது மட்டும் இன்றி காரையும் பரிசாக வழங்கியது. அதனாலேயே ரசிகர்கள் ஏ ஆர் ரகுமானுக்கும் பரிசு கொடுக்க வேண்டும் என எதிர்பார்த்து வருகின்றனர்.