மதுரை மாநகராட்சி வேலை வாய்ப்பு; டிகிரி தகுதி; உடனே விண்ணப்பிங்க!

மதுரை மாவட்டம் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்வாதார இயக்கம் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, அலுவலகத்தில் சமுதாய அமைப்பாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 5 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 30.08.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

சமுதாய அமைப்பாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 5

கல்வித் தகுதி: இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். கணினி இயக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: ரூ. 16,000

தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://madurai.nic.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் நகர வாழ்வாதார மையங்கள் மற்றும் கற்றல் மைய அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.08.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://madurai.nic.in/ என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *