தலனா இவர் மட்டும் தான்.. ட்ரோலுக்கு வெங்கட் பிரபு கொடுத்த விளக்கம்

Venkat Prabhu : சமீபத்தில் வெங்கட் பிரபுவின் கோட் படம் திரையரங்குகளில் வெளியாகி வசூல் வேட்டையாடி வருகிறது. ஒருபுறம் இந்த படத்திற்கு வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் மற்றொருபுறம் ட்ரோல் கன்டென்ட் ஆக மாறி இருக்கிறது. விஜய்யின் சிறு வயது புகைப்படத்தை மீம்ஸ் கிரியேட்டர்கள் கிண்டல் செய்து வருகிறார்கள்.

அதோடு அஜித் ட்ரோல் செய்யும்படி ஒரு கன்டென்ட் வெளியான நிலையில் அதை ஏஜிஎஸ் நிறுவனம் ரீபோஸ்ட் செய்தது சர்ச்சையானது. மற்றொருபுறம் கிளைமாக்ஸ் காட்சியில் தல என்று சொன்னவுடன் அஜித் ரசிகர்கள் தியேட்டரிலேயே ஆர்ப்பரித்திருந்தனர்.

ஆனால் அதன் பிறகு தல என்று தோனியை தான் வெங்கட் பிரபு குறிப்பிட்டு இருந்தார் என்று மீம்ஸ் கிரியேட் செய்யப்பட்டது. இதனால் காண்டான அஜித் ரசிகர்கள் வெங்கட் பிரபுவை வறுத்தெடுக்கும்படி ட்விட்டரில் கமென்ட் செய்து வந்தனர்.

ட்ரோலுக்கு விளக்கம் கொடுத்த வெங்கட் பிரபு

இந்த சூழலில் இந்த ட்ரோலுக்கு விளக்கம் கொடுத்தார் வெங்கட் பிரபு. அதாவது தன்னை பொருத்தவரையில் தல என்று அதில் குறிப்பிடும் போது அஜித்தை தான் காட்டினோம். அதுவும் அப்போது தெளிவாக அதில் மங்காத்தா பிஜிஎம் ஒலிக்கும்.

அதேபோல் தான் மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல என்று சொல்வது ஒரு மகிழ்ச்சியின் வெளிப்பாட்டாக வைத்தோம். கோட் படத்தில் தல என்பது தோனி இல்லை, அஜித் தான் என்பதை இந்த பேட்டியின் மூலம் வெங்கட் பிரபு தெளிவுபடுத்தியிருக்கிறார்.

என்னதான் அஜித்தே தன்னை தல என்று அழைக்க வேண்டாம் என்று ரசிகர்களிடம் சொன்னாலும் தற்போதும் மக்கள் மனதில் அஜித் தலயாக தான் இருக்கிறார். இந்தப் பேட்டிக்கு பிறகு அஜித் ரசிகர்கள் வெங்கட் பிரபுவின் மீது உள்ள கோபத்தை தனித்து கொள்வார்கள்.

ட்ரோலுக்கு உள்ளான கோட்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *