சென்னையில் இன்று (செப்டம்பர் 11) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக, கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
மீஞ்சூர்
மீஞ்சூர் டவுன், டி.எச்.ரோடு, தேரடி தெரு, சிறுவாக்கம், சூரியா நகர், பி.டி.ஓ. அலுவலகம், வன்னிப்பாக்கம், சீமாவரம், ஆர்.ஆர்.பாளையம் அரியன்வாயல், புதுப்பேடு, நந்தியம்பாக்கம், மேலூர், பட்டமந்திரி, வல்லூர், அத்திப்பட்டு, ஜி.ஆர்.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், கொண்டக்கரை, பள்ளிபுரம், வழுதிகைமேடு, கரையான்மேடு.