புதுச்சேரியில் இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் முதலியார்பேட்டையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சலீம் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., திமுக மாநில அமைப்பாளர் சிவா, முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, உள்ளிட்ட விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் மின் கட்டண உயர்வை கண்டித்து போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்கள், புதுச்சேரியில் உயர்த்தப்பட்டுள்ள மின்கட்டண உயர்வை ரத்து செய்ய கோரியும், ப்ரீபெய்டு மீட்டர் திட்டத்தை கைவிட கோரியும், மின்துறையை தனியார் மயம் ஆக்குவதை கைவிட கோரியும் இந்தியா கூட்டணி சார்பில் வருகிற 18-ம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்துவது என தெரிவித்தனர். இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவெடுக்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.