ஏஜென்ட் டீனா விக்ரம் படத்தில் காட்டிய ஆக்சன்.. வேட்டையன் படத்தையும் விட்டு வைக்கல, சம்பவம் செய்த வசந்தி

Agent Teena Vettaiyan: லோகேஷ் இயக்கத்தில் கமல் நடிப்பில் விக்ரம் படம் அதிரடி ஆக்சன் ஆக வெளிவந்து வெற்றி பெற்று கமலுக்கு மிகப்பெரிய கம்பேக் கொடுத்தது. இதில் விக்ரம் சேதுபதி, பகத் பாஸில் போன்ற சில ஆர்டிஸ்ட்கள் நடித்து மக்களிடம் எந்த அளவிற்கு பெயர் பெற்றார்களோ, அதே மாதிரி ஏஜென் டீனா கதாபாத்திரத்தையும் யாராலயும் மறக்க முடியாது. அந்த அளவிற்கு இவருடைய கேரக்டர் மக்களை கவர்ந்தது.

அமைதிக்குப்பின் புயல் என்று சொல்வதற்கு ஏற்ப வீட்டு வேலையை பார்த்து அமைதியாக நடித்து வந்த ஏஜென்ட் டீனா, அந்த வீட்டில் பிரச்சனை என்று தெரிந்ததும் பொங்கி எழுந்து விஸ்வரூபம் எடுத்து அனைவரையும் வசம் செய்தது பார்ப்பவர்களை புல்லரிக்க வைத்து விட்டது. அதிலும் ஏஜென்ட் டீனா ரிப்போட்டிங் சார் என்று சொல்லும் அந்த ஒரு நிமிடம் ஒட்டுமொத்த திரையரங்கையும் ஆர்ப்பரிக்க செய்துவிட்டது.

விக்ரம் படத்தைத் தொடர்ந்து வேட்டையன் படத்தில் கிடைத்த சாங்ஸ்

முக்கியமாக விக்ரம் படத்தில் மூன்று முன்னணி நடிகர்கள் நடித்திருந்தும், அவர்களுக்கு இணையாக மக்கள் மனதில் இடம் பிடித்தது ஏஜென்ட் டீனா கதாபாத்திரத்தில் நடித்த வசந்தி என்பவர்தான். இவர் பல திரைப்படங்களில் உதவி நடன இயக்குனராக பணியாற்றி வந்திருக்கிறார். நடனத்தின் மீது அதிக ஆர்வம் இருந்ததால் பிருந்தா மாஸ்டரிடம் உதவி நடன இயக்குனராக பணியாற்றினார்.

அதன் பின் அஜித், விஜய், சூர்யா போன்ற டாப் ஹீரோகளுக்கு கோரியோகிராப் செய்து வந்தார். அப்படிப்பட்டவர் தமிழ், தெலுங்கு என பல்வேறு மொழிகளில் கிட்டத்தட்ட 200 படங்களுக்கும் மேல் பணியாற்றி இருக்கிறார். இன்னும் சொல்லப்போனால் விஜய் நடிப்பில் வெளிவந்த பகவதி படத்தில் அள்ளு அள்ளு என்ற பாடலிலும், அஜித் நடிப்பில் வெளிவந்த வில்லன் படத்தில் அடிச்சா நெத்தியடி பாடலிலும் நடனம் ஆடி இருக்கிறார்.

இப்படி 30 வருஷமாக திரை உலகில் இருக்கும் இவர் தற்போது நடன இயக்குனர் தினேஷுடன் பணியாற்றி வருகிறார். இப்படிப்பட்டவரை லோகேஷ், விக்ரம் படத்தின் மூலம் ஒரு ஆர்டிஸ்ட் ஆக அறிமுகப்படுத்தி இருக்கிறார். இதன் மூலம் மக்களிடம் பிரபலமான ஏஜென்ட் டீனா தற்போது ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள வேட்டையன் படத்தையும் விட்டு வைக்கவில்லை.

அதாவது ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள வேட்டையன் படம் வருகிற அக்டோபர் 10ஆம் தேதி அனைத்து திரையரங்களிலும் வெளியாக இருக்கிறது. ரஜினி உடன் அமிதாப்பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியார், ரித்திகா சிங் போன்ற பலரும் நடித்திருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் சில நாட்களுக்கு முன்பு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது. மனசிலாயோ என்னும் பாடல் சமூக வலைதளங்களில் டிரண்டாகி வருகிறது.

இதனை அடுத்து மஞ்சுவாரியர் பாடிய பாடலின் லிரிக்ஸ் வீடியோவில் மஞ்சுவாரியர் கூலிங் கிளாஸ் போட்டு சிகப்பு நிற சேலையில் ஆடிய ஆட்டம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து விட்டது. அந்த அளவிற்கு மஞ்சு வாரியர் பார்ப்பதற்கு ரொம்பவே க்யூட்டாக இருக்கிறார்.

அதில் இவரை பார்ப்பதற்கு இவருக்கு 46 வயதா என்று நம்ப முடியாத அளவிற்கு இளம் நடிகையாக ஜொலிக்கிறார். தற்போது இந்த பாடலை மஞ்சு வாரியருக்கு கோரியோகிராப் பண்ணது விக்ரம் படத்தில் ஏஜென்ட் டீனாவாக நடித்த வசந்தி தான். இவர் மஞ்சுவாரியாருக்கு சொல்லிக் கொடுக்கும் டான்ஸ் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *