சென்னை: கொலை செய்யப்பட்ட தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த பள்ளி தாளாளர் அருண்ராஜ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ல் படுகொலை செய்யப்பட்டார். அவரது மனைவிக்கு, கடந்த வாரம் கொலை மிரட்டல் வந்தது. குழந்தையை கடத்தி கொலை செய்வோம் என மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது. இது தொடர்பாக பொற்கொடி போலீசில் புகார் அளித்தார். பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் அருண்ராஜ் என்பவரை கைது செய்தனர். தனியார் பள்ளி ஒன்றின் தாளாளர் ஆக உள்ளார். அவரது பெயரில் பணியாற்றும் சதீஸ் என்ற ஊழியர் பெயரில் மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.
கடலூரில் முதன்மை கல்வி அலுவலருக்கு அருண்ராஜ் ஏற்கனவே கைதாகி உள்ளார். இந்த வழக்கில் சதீஷ் முக்கிய சாட்சியாக சேர்க்கப்பட்டு உள்ளார். சதீஷை பழிவாங்குவதற்காக அவரது பெயரில் அருண்ராஜ் மிரட்டல் விடுத்தது தெரியவந்துள்ளது.